பொன்னேரி அருகே, பெரவள்ளூர் அருள்மிகு நம்மீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் நடைபெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பெரவள்ளூரில் அருள்மிகு நந்தீஸ்வரர் எனும் செந்தமிழ் சொக்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகமும், அப்பர் திருக்கைலாய வாத்திய திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் கண்டமணி சீர் தொண்டு பரவுதல் மற்றும் தூய தீப ஆராதனை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சாய் அறகூழ் சாலை ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 108 முறை ஓம் நமசிவாய என்று எழுதி தந்தவர்களுக்கு ஒரு ருத்ராட்ச மாலை வழங்கப்பட்டது. பெரவள்ளூர் கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777