பழவேற்காட்டில், அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் சார்பில் சமய சார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தீர்மானம்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் நடைபெற்ற திருவள்ளூர் (சித்தூர்,நெல்லூர்) மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் 38வது பொதுக் குழு கூட்டம் மற்றும் சமூக சிந்தனை கருத்தரங்கத்தில் சமய சார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கமிட்டியின் தலைவர் சீனி ஆத்திம் கனி தலைமையில் செய்யது இப்ராஹிம் நூர் முஹம்மது முன்னிலையில் ஆண்டறிக்கையினை ஹாஸ் மிஸ்பாஹ் வாசித்தார். சேக் அகமது தீர்மான நகலை வாசித்தார்.

இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகள் இடையே உரையாற்றினார். அவர் பேசும்போது, “பொதுவாக முஸ்லிம் ஜமாத்களில் அரசியல் பற்றி பேசுவது கிடையாது. ஆனால் காலத்தின் கட்டாயத்தின் காரணமாக அரசியல் மாற்றம் வேண்டி, நாம் இங்கு பேச வேண்டி இருப்பது இருக்கிறது.90 விழுக்காடாவது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய சட்டம் இயற்றக்கூடிய ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும்” எனக் கூறினார்.

தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு தலைவர்
முகமது பஷிர், தமிழ்நாடு தொண்டு இயக்க தலைவர் சே.மு.முஹம்மது அலி ஆகியோர் தகுந்த தலைப்புகளுக்கு ஏற்ப கருத்துரையாற்றினர்.இதில் ஏராளமான முஸ்லிம் உலமாக்கள், மசூதிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777