August 3, 2021

சேலம் அன்னதானப்பட்டி, காளியம்மன் கோவிலில் தீ குண்டம் இறங்கிய பக்தர்கள்…

1 min read

சேலம் டவுன் அன்னதானப்பட்டி, காளியம்மன் பந்தல் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 42ம் ஆண்டு மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று காலை தீமிதி திருவிழா நடைபெற்றது. சேலம் டவுன் அன்னதானப்பட்டி, காளியம்மன் பந்தல் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 42ம் ஆண்டு மாசித்திருவிழா கடந்த மாசி 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

மாசி 5ம் தேதி முதல் மாசி 25ம் தேதிவரை காலை மாலை என இரு வேளையும் அம்மனுக்கு அபிஷேகம் ஆதாரனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சக்தி அழைப்பு மற்றும் அக்னி தீ கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று புதன் கிழமை காலை 10.30 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் பசுமாடு தீயில் இறங்கி நடந்து வந்தது.

அதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திகடனை நிறைவேற்றினார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வெங்கடாஜலபதி, பொருளாளர் சாந்தகுமார், துணை தலைவர் ஜெயமுருகன், துணை செயலாளர் பிரபாகரன் இணைத் தலைவர் விஜயகுமார் இணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள்,
சக்தி கரகம் மோகனசுந்தரம், கோவில் பக்க பூசாரி சூசை மற்றும் கோவில் நிர்வாகக்குழுவினர், சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஸ்டீபன், வழக்கறிஞர் சாந்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed