April 20, 2021

பழவேற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபாபு ஜெயின் கல்லூரி சார்பில், கல்லூரி முதல்வர் நாகஜோதி தலைமையிலான பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்களின் பாடத் திட்டங்களுக்கு ஏற்ப மேல்நிலைப் பள்ளி முடித்து கல்லூரி செல்லும் போது தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

மேலும், ஒவ்வொரு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் அடுத்த நிலைக்கு செல்ல தங்களை எவ்வாறு தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்வில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் மற்றும் ஜெயின் கல்லூரி பேராசிரியர்கள் மோகன், கலைச்செல்வம், தனஞ்செயன் சுரேஷ்குமார், முரளிதரன், பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *