உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் பெண் தொழில் முனைவோர் சார்பில் தொழிற்காட்சி…
1 min read
சேலம் சாரதா காலேஜ் மெயின்ரோட்டில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் வருகிற 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெஐபி சேலம் 3.0 பெண் தொழில் முனைவோர் நடத்தும் மாபெரும் தொழிற்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ஜேஐபி சேலம் பயிற்சியாளர் சுகந்தி சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெஐபி நடத்தும் தொழிற்காட்சி நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட ஷாப்பிங் கடைகள், விளையாட்டுப்போட்டிகள், கையெழுத்துப் போட்டிகள், அறுசுவை உணவுகள், சுவையான ஸ்னாக்ஸ், கார் கண்காட்சி, விருதுகள் மற்றும் அங்கீகாரம் போன்ற எண்ணற்ற கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

மேலும் எக்ஸ்போவில் குழந்தைகளுக்கான பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியானது முழுவதும் பெண்கள் தங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சேர்மன் சுஜாதா மற்றும் நிர்வாகிகள் அம்பிகா, லாவண்யா, கவிதா, அருணா, யாஷ்மின் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777