சேலம், பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், மாபெரும் சத்தாபரண நிகழ்ச்சி…
1 min read
சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த மாசி 4ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மாசி 8ம் தேதி இரவு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாசி 9ம் தேதி ஸ்ரீ முனியப்பன் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், வான வேடிக்கையும், நையாண்டி மேளம், குறவன் குறத்தி நாடகம் நடைபெற்றது.

மாசி 11ம் தேதி, பெரிய வயல்காடு, இராவனேஸ்வரா நகர், கோடிப்பள்ளம் ஊர் பொதுமக்கள் சார்பில், மாபெரும் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது. மாசி 14ம் தேசி, ஸ்ரீ மாரியம்மன் நற்பணி மன்றம் சார்பில், மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாசி 15ம் தேதி சின்னேரி வயல்காடு, சினிமாநகர், குப்தா நகர், ராயல் கார்டன் சார்பில், பண்டு குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், வான வேடிக்கை மற்றும் நையாண்டி மேளம், குறவன் குறத்தி நாடகம் நடைபெற்றது.

மாசி 18ம் தேதி விடியற்காலை அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, மாசி 19ம் தேதி புதன் கிழமை விடியற்காலை அம்மனுக்கு உருள தண்டம், சேத்து முட்டி, பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும், மதியம் 3 மணிக்கு சக்தி கரகம், அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம், முளைபாழி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இந்தியன் பாய்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், வானவேடிக்கை, தொடர் அதிர்வேட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாசி 20ம் தேதி விடியற்காலை மாரியம்மன் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், மாபெரும் சத்தாபரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கல் நகையால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலும், புஷ்ப பல்லக்கிலும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாசி 21ம் தேதி அம்மனுக்கு மஞ்சல் நீராட்டு விழாவும், உற்சவ ஊர்வலமும், மாசி 22ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777