திருவள்ளூர் மாவட்ட அமமுக கட்சியினர், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்…
1 min read
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் இருக்கும் நிலையில்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியின் சார்பில், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொன்ராஜ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அதேபோல், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீ குணவர்தனவின் விருப்ப மனு மனு தாக்கல் செய்தார். அதில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் புதுவயல் சரவணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மன்சூர் அலி, சைட்டிவி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் துளசி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன்,
எல்லாபுரம் ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், புன்னப்பாக்கம் ஊராட்சி செயலாளர் லட்சாதி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பலராமன், பாக்கர் உட்பட திரளான நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777