ஊத்துக்கோட்டையில், வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க, மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…
1 min read
தமிழக சட்ட சபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதில் குறிப்பாக, பணம் பட்டுவாடவை தடுக்க திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தமிழக எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்து, வாக்காளர்கள் அதை எப்படி பயன்படுத்துவது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் சிலைகள் மற்றும் சின்னங்களை துணிகளை கொண்டு அதிகாரிகள் முடிவருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவுகளை பதிவாக வேண்டி, ஊத்துக்கோட்டையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அப் பேரணிக்கு, வட்டாட்சியர் குமார் தலைமை தாங்கினார். பேரணியை மாவட்ட வருவாய் துறை அலுவலர் முத்துசாமி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். தாலுக்கா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகளான நேரு பஜார், திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு சாலை வழியாக சென்று மீண்டும் தாலுக்கா அலுவலகத்தில் வந்தடைந்தது.

அதில், 100 க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பேரணியில் கலந்துகொண்டு ஒட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும் அனைவரும் தவறாமல் ஒட்டு போட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி சென்றனர். இந்த பேரணியில் கும்மிடிப்பூண்டி தேர்தல் அதிகாரி பாலகுரு, ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி, காவல் ஆய்வாளர் குமார் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777