பத்திரிக்கையாருக்கு எதிரிகள் மற்றவர்கள் இல்லை… நாமே தான், டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆதங்கம்…
1 min read
தமிழ்நாடு அரசு வழங்கும் பல நலத்திட்டங்களை அனைத்து பத்திரிகையாளர்களும் வழங்கும் எண்ணமும் விருப்பங்களும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 90 % செய்தி தொடர்பாளர்களுக்கும் உண்டு ! ஆனால் அதை முழுமையாக அனைவருக்கும் கிடைக்கவிடாமல் தடுப்பது மாவட்ட நிருபர்களில் உள்ள, முன்னனி பத்திரிகையாளர்களே !

இந்த பத்திரிகை தொடர்ந்து வருவது இல்லை, இவன் போலி நிருபர், நிர்வாகம் இவரை கண்டித்து அனுப்பிவிட்டது, இவர் அரசுக்கு எதிராக செய்தி போடுவார், என்றெல்லாம் சொல்லி குறிப்பிட்ட ஒரு சிலர்கள் மட்டுமே அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்ற கேவலமான நோக்கத்தில் பி.ஆர்.ஓக்களை இயக்கி வருகின்றனர் !
60 % பி.ஆர்.ஓக்கள் அவர்கள் சொல்வதை காதில் வாங்காமல் சரி…சரி …என்று சொல்லி ஞாயமாக நடப்பார்கள் ! மீதம் உள்ளவர்கள் நம்முடைய பிரிவினையை தனக்கு சாதகமாக அமைத்து கொள்வார்கள் !
இதற்கான காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லாத நிலைதான் !

நான் தினத்தந்தி, நான் தினகரன், நான் தினமலர் என்று அச்சு ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களும், நான் சன் டிவி, நான் ஜெயா டிவி, என்று காட்சி ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களும் சில விஷயங்களை நினைத்து பார்ப்பது இல்லை ! இவர்கள் யாரும் 200 வருடங்கள் வாழப் போகின்றவர்கள் இல்லை, இவர்களில் யாராவது இறந்தால், நமது சங்கத்தின் சார்பில் பணம் கொடுத்து அஞ்சலி செய்தி வெளியிடச் சொன்னால் கூட ,௯40, 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நிர்வாகம் அந்த இரங்கல் செய்தி விளம்பரங்களை கூட சொந்த பத்திரிகைகளில் போடாது ! இந்த நிலையில் ஒரு சிலர் பி.ஆர்.ஓக்களுடன் கை கோர்த்து கொண்டு சக பத்திரிகையாளர்களையே அவமதிப்பு செய்து வருகின்றனர் !

பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நிலை இல்லை, ஒரு சில மாவட்டங்களில் தான் இதுபோல் சூழ்நிலை நிலவுகிறது. 80 % மூத்த பத்திரிகையாளர்கள் இளைஞர்களை ஊக்குவிப்பு செய்து வருகின்றனர் . 20 % மூத்த பத்திரிகையாளர்கள் 500 வருடங்களுக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்ய போவதாக நினைத்து கொண்டு உள்ளார்கள் ! என்னுடைய கடந்த கால அனுபவங்களில், இது போன்றவர்களின் இறுதிச் சடங்கில் கூட பலர் கலந்து கொள்ளாமல் போவதை நான் கவனித்து வருகிறேன். அரசின் சலுகைகளை அனைவருக்கும் நீங்கள் முன் நின்று பெற்றுத் தர வேண்டாம், தர நினைக்கும் பி.ஆர்.ஓக்களை தயவு செய்து தடுக்காதீர்கள், “பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்யும் பி.ஆர்.ஓக்களை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தலையில் வைத்து கொண்டாடுவோம்” என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் !
இனியாவது சொந்த வீட்டிற்குள் இருந்து கொண்டே கல் எரிவதை, 200 வருடங்கள் வாழப் போகின்றவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
நிழல். இன் – 8939476777