April 20, 2021

இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்திய, நகரி எம்எல்ஏ, நடிகை ரோஜா…

1 min read

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகை ரோஜா, அவர் நடிப்பாலும் மற்றும் நடனங்களாலும் பல வருடங்களுக்கு முன் ரசிகர் மனதை கொள்ளை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே, இன்று வரை நடிகர் பிரபுதேவாவுக்கு இணையாக நடனமாடிய நடிகைகளில் ரோஜாவை மிஞ்சியவர் யாருமில்லை என்ற பொதுவான கருத்து இன்றும் நிலவுகிறது.

தற்போது நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பிய நடிகை ரோஜா, எப்போதும் பரபரப்பாகவே அரசியலில் பேசி வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி வருபவர்.

அதேபோல், தற்போதும் நடிகை ரோஜா ஆந்திராவில் அவர் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய நகரி பகுதியில், அம்பேத்கர் தொடர் கபடி போட்டியை துவக்கி வைக்க சென்றிருந்தார். அப்போது இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததில் மிகவும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

உடனே உற்சாக மிகுதியால், அவர் இளைஞர்களுடன் கபாடி விளையாட விரும்புவதாக கூறினார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த இளைஞர்கள் அவரை மிகவும் உற்சாகப்படுத்தினர். அப்போது அவருடன் வந்து இருந்தவர்கள் யாரும் சிறிதும் எதிர்பாராத நிலையில், நடிகை ரோஜா அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் உடன் அதிரடியாக, ஆடு களத்தில் இறங்கி, கபடி விளையாடினார்.

நடிகை ரோஜா தங்களுடன் களத்தில் இறங்கி கபடி விளையாடுவதை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி பொதுமக்களும் மிகவும் உற்சாகம் அடைந்ததுடன், தங்கள் தொகுதி எம்எல்ஏ வும், நடிகையுமான ரோஜாவை பாராட்டி மகிழ்ந்தனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *