சேலத்தில், திமுக நெசவாளர் அணி சார்பில், பேராசிரியர் க.அன்பழகன் நினைவு தினம்…
1 min read
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க .அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திமுக நெசவாளர் அணி சார்பில், சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, பகுதி செயலாளர் தனசேகரன் தலைமை வகித்தார். பேரறிஞர் அண்ணா நற்பணி மன்ற செயலாளர் கே.குமாரசாமி க.அன்பழகனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கோட்ட செயலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கந்தவேல், கிருஷ்ணன், லட்சுமணன், ஆசிரியர் மா.செவ்வேள், பேரறிஞர் அண்ணா நற்பணி மன்ற தலைவர் பொட்டு பி.சேகர், பொருளாளர் பொட்டு பி.ஞானசேகரன், ஆலோசகர் கே.கலைச்செல்வன், மற்றும் நிர்வாகிகள் வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777