April 20, 2021

திருவள்ளூர் அருகே, ஓடும் ரயிலிருந்து 2 மகள்களை தள்ளி விட்டு, தாயும் குதித்ததில், அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் மூவரும் உயிர் தப்பினர்…

1 min read

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச சேர்ந்தவர் கதிரேசன். இவர் கடந்த ஒரு மாதம் முன்பு இறந்து விட்டதால், அவரது மனைவி
முனிலட்சுமி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் அவர் பட்டாபிராம் பகுதியில் இருந்து அரக்கோணம் செல்லும் தொடர் வண்டியில் தமது 2 மகள்களை அழைத்துக் கொண்டு புட்லூர் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், ஆனால் அவர் செவ்வாப்பேட்டை- புட்லூர் இடையே ஓடும் ரயிலில் இருந்து தமது 2 மகள்களையும் தள்ளிவிட்டு தானும் கீழே குதித்துள்ளார்.

அப்போது சக பயணிகள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் முனிலட்சுமிக்கு இடதுகையை உடைந்து தலையில் பலத்த அடியும் பட்டுள்ளது, அவருடைய 13 வயது மகள் ஹர்ஷிதா, 7 வயதுடைய வர்ஷிதா படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *