August 3, 2021

பூந்தமல்லியில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு பிரத்யேக “பிங்க் பூத்” வாக்குச்சாவடி மையம்…

1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி் வாக்குச் சாவடி மையத்தில் பெண்களை போற்றும் வகையில் வாக்குச்சாவடி மையம், பிங்க் பூத்தாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக இந்த கட்டிடம் முழுவதும் பிங்க் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு பிங்க் நிற பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்தப் பூத்தில் பணியில் இருக்கும் தேர்தல் பணியாளர்களும் பிங்க் நிற புடவை அணிந்திருந்தனர்.

இந்த சிறப்பு பிங்க் பூத் வாக்குப் பதிவு மையத்தை பூந்தமல்லி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி திறந்து வைத்தார். வாக்கு பதிவு மையம் முழுவதும் வெட்டப்பட்ட ரிப்பன் முதல் நோட்டு, புத்தகம், பேனா என, அனைத்துப் பொருட்களும் பிங்க் நிறத்தில் இருந்ததும், பணியாளர்கள், அதிகாரி என அனைவரும் பிங்க் நிறத்தில் உடை அணிந்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதில், பெண்கள் வாக்கு அளிப்பது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து மாதிரி ஓட்டும் போடப்பட்டது.
கடந்த முறை பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில், பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்ததால், இந்த முறை பெண்களை அதிக அளவில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரவைக்க பெண்களுக்காக சிறப்பு பிங் பூத் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது, “பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சி,” என்று தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி தெரிவித்தார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed