திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தின நிகழ்ச்சி, மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தின நிகழ்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனைப் படைத்த மகளிர் குறித்தும், தற்போது மருத்துவ சேவைகளில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் குறித்தும் முன் மாதிரியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

கர்பிணிப் பெண்கள் பெண் குழந்தைகளை ஈன்றெடுப்பதை பெருமையாக நினைக்க வேண்டும் எனவும், வருங்காலம் பெண்கள் கையில் இருப்பதையும் மருத்துவர் சங்கர், வட்டார சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கினர்.

மருத்துவமனைக்கு வருகை தந்த அனைவருக்கும் கை கழுவுவதன் அவசியம் குறித்தும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் செல்லம்மாள்,செவிலியர் மேற்பார்வையாளர் வனஜா உள்ளிட்ட செவிலியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777