April 20, 2021

புரட்சித்தலைவி அம்மாவை, நேரில் சந்தித்து, பொன்னேரி தொகுதிக்கு பல வளர்ச்சிப்பணிகள் பெற்றுத் தந்திருக்கிறேன், முன்னாள் எம்எல்ஏ பொன்ராஜா பேட்டி…

1 min read

பொன்னேரி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, யாரும் குறை கூறும் அளவிற்கு நான் செயல்படவில்லை, என்னால் முடிந்த அளவிற்கு ஒவ்வொரு துறை அதிகாரிகளையும், ஒவ்வொரு துறை அமைச்சர்களையும், ஒரு சில சமயங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் நேரடியாக அணுகியும், பல வளர்ச்சிப் பணிகளை செய்திருக்கிறேன். என முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ராஜா கூறினார். நான் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த 2011 முதல் 2016 வரை பல நிரந்தரமாக, பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ச்சிப் பணிகளை செய்து இருக்கிறேன். என கூறினார்,

அதில், குறிப்பாக பொன்னேரி தொகுதி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலும், அதிலும் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகள் மற்றும் மீனவ சமுதாயத்தை சார்ந்த மக்கள் என்பதாலும், பல நிரந்தர வளர்ச்சிப் பணிகளை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறேன்.

பொன்னேரி தொகுதியில் அமைந்திருந்த உலகநாத நாராயணசுவாமி கல்லூரிக்கு மிகவும் போராடி பல வளர்ச்சிப் பணிகளை செய்திருக்கிறேன். அந்த கல்லூரியில் குறைந்த அளவு பாடப்பிரிவுகள் இருந்தது. ஆகையால் இக்கல்லூரியில் நான் பலவிதங்களில் போராடி முயற்சிகள் மேற்கொண்டு, பி காம், பிஎச்டி, எம்.பில், தமிழ்லிட், உட்பட பல பாடப்பிரிவுகளை விடாமுயற்சியுடன் முயன்று கொண்டு வந்தேன். அந்த கல்லூரி துவங்கிய நாளிலிருந்து, 1,250 மாணவர்களை மட்டுமே ஆண்டுகள் தோரும் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால், என்னுடைய முயற்சியால் அந்த கல்லூரிக்கு புதியதாக 19 பாடப்பிரிவுகள் கொண்டு வந்திருக்கிறேன். மேலும், அக் கல்லூரியை பகுதி நேர கல்லூரியாக மாற்றி, அதன் மூலம் அதிக அளவில் மாணவர்கள் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்தேன். அதன் விளைவாக தற்போது ஆண்டுக்கு 5,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அந்தக் கல்லூரியில் சேர்ந்து பட்டபடிப்பு படித்து பயனடைகின்றனர்.

பொன்னேரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கும்பமுனீஸ்வரர் ஆலயத்தில், நூறு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, குடமுழுக்கு திருவிழாவை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, குடமுழுக்கு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் மிக விமரிசையாக நடத்தப்பட்டது. மேலூர் திருவுடையம்மன் கோயிலில் 60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டி கொடுக்கப்பட்டது. அதேபோல் செவ்வாய்க்கிழமை தோறும், 20க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யப்பட்டது.

பொன்னேரி பகுதியில் 40 ஆண்டு கோரிக்கையாக இருந்த குன்னமஞ்சேரி பாலம் 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டப்பட்டது. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில், 15 லட்சம் செலவில் பொது கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டது. பொன்னேரி பகுதி விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையான, நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. பொன்னேரி பகுதி விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு அம்மா அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்திலேயே, பொன்னேரி தொகுதியில், விவசாயிகள் பங்களிப்புடன் கஸ்டமர் இயரிங் சென்டர் அமைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

மீஞ்சூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நவீன மருத்துவ மனையாக மாற்றி, அதிக அளவில் படுக்கை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. ஆரணி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது. மேலும், அதே ஆரணி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது. தேவம்பட்டு மற்றும் வன்னிபாக்கம் பகுதிகளில் கால்நடை மருத்துவமனை புதியதாக ஏற்படுத்தப்பட்டது. பொன்னேரி தொகுதியில் அடங்கிய மீஞ்சூர், பெரிய முல்லைவாயல், சேகரனயம், உமிபேடு ஆகிய பகுதிகளில் தலா 30 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

அம்மா அவர்கள் ஆட்சி செய்தபோது தமிழகத்தில் உள்ள மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் மீன்வளத் துறை வளர்ச்சிகாகவும், மாணவர்கள் படித்து பயன் பெறும் வகையிலும், கல்லூரியுடன் கூடிய ஆராய்ச்சி நிலையம் 68 கோடி செலவில் தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அந்தக் கல்லூரியை சென்னையின் அருகே உள்ள நமது தொகுதி பொன்னேரியில் துவங்க வேண்டும், என அம்மாவிடம் கோரிக்கை வைத்து போராடி, பொன்னேரியில் நிறுவ முயற்சிகள் மேற்கொண்டேன்.

அதேபோல், பழவேற்காடு மீனவ மக்கள் பயன் பெறும் வகையில், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடிக்கடி சிக்கலை உருவாக்கி வந்த பழவேற்காடு முகத்துவாரம் பகுதியை, ஆண்டு தோறும் மீனவ கிராம மக்களே அவர்களுடைய சொந்த செலவில் தூர் வாரிக்கொண்டு இருந்தனர். என்னுடைய தீவிர முயற்சியின் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக, நமது பழவேற்காடு முகத்துவார பகுதியை அரசு செலவில் தூர்வாரும் பணிகள் செய்து முடிக்க ஏற்பாடுகள் செய்தேன். அதன்படி முதன் முறையாக, 2014ம் ஆண்டு 16 லட்சம் செலவில் முதல் முதலில் தூர்வாரப்பட்டு அதிலிருந்து முகத்துவாரத்தில் அடைப்புகள் ஏற்படும் போதெல்லாம், இன்று வரை அரசின் செலவிலேயே தூர்வாரும் அளவிற்கு நான் ஏற்பாடு செய்தேன்.

அது மட்டுமில்லாமல் அந்த முகத்துவார பகுதியில் தமிழகத்திலேயே முதல் முறையாக, வேறு எந்த முகத்துவாரத்திலும் செய்து கொடுக்கப்படாத நிலையில், நமது பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு,
சிறிய மீன்பிடித் துறைமுகம் அளவிற்கு தூண்டில் வளைவு அமைத்து பாதுகாக்கப்பட, பல விதங்களில் போராடி முயற்சிகள் செய்தேன். அதன் விளைவாக அப்போது தமிழக அரசின் சார்பில், 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

என்னுடைய தீவிர முயற்சியால், பழவேற்காடு கோட்டை குப்பம் ஊராட்சியில் அடங்கிய, ஜமீலாபாத் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சுமார் 120 கோடியில் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. அங்கே இந்த கடல்நீரை குடிநீராக்கும் மையத்தில், தினமும் 2 கோடி லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அந்த குடிநீர் பொன்னேரி, மற்றும் கும்மிடிப்பூண்டி, மாதவரம் போன்ற தொகுதி மக்களின் குடிநீர் தேவைகாக வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான மாநில நிர்வாகத்தின் பங்கு தொகையாக, 30% சதவிகிதம் தொகையை, மாண்புமிகு நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கினார்கள். மேலும், மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த 70% சதவிகித தொகையை வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் அடுத்து வந்த சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது தான் கொடுமை.

மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பசியாவரம் பாலம் அமைக்க நமது மாண்புமிகு அம்மா அவர்கள், 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அந்தப் பாலத்தின் பணிகள் மத்திய அரசின் மூலம் தடையில்லா சான்று கிடைக்காத காரணத்தால், தடைபட்டு நின்றிருந்தது. அதற்காக, நான் நமது முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த, வரப்பிரசாத்ராவ் அவர்களை அணுகி அவர் மூலமாக, அந்தப் பசியவரம் பாலம் கட்டும் பணிக்கு இருந்த தடையை நீக்கி, தடையில்லா சான்றிதழ் கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டேன். பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்காக, மெத்தூரிலிருந்து 60 லட்சம் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டேன்.
பழவேற்காடு பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக, அம்மாவை நேரில் சந்தித்து முறையிட்டதன் விளைவாக, அவர் எல்.என்.டி நிறுவனத்திற்கு உத்தரவிட்டதன் மூலம், அந்த நிறுவனத்தில் 260 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்தேன்.

அண்ணாமலைச்சேரி பெரிய மாங்கோடு இடையே அப்பகுதி மீனவ கிராம மக்கள் பயனடையும் வகையில், இரண்டு கிராமத்திற்கும் மையப்பகுதியில், மீன் இறக்குதளம் 10 கோடி செலவில் அமைக்கப்பட்டது. அண்ணாமலைச்சேரி சுண்ணாம்புகுளம் இடையே 4 கோடி செலவில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி அம்மன் குளம் பகுதியில், தொழில் பயிற்சி மையம் 3 கோடி செலவில் அமைக்கப்பட்டு, அங்கு மாணவர்கள் தொழில் பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டது. அங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 6,000 உதவி தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு, எல்.என்.டி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கவும் ஏற்பாடு செய்தேன். ஆனால் அந்த தொழிற்பயிற்சி மையம் இளைஞர்களுக்கு பயன்படாத வகையில் தற்போது வீணாகி போய்விட்டது. என வருத்தத்துடன் கூறினர்.

G.பாலகிருஷ்ணன் நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *