April 20, 2021

விளையாட செல்வதாக கூறி சென்ற, 7 வயது சிறுவன் புழல் ஏரியில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

1 min read

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கே.எஸ் நகர் 2-வது தெருவைச சேர்ந்தவர் மைக்கேல். அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது 7 வயது மகன் ரூபன், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வீட்டில் இருந்து சைக்கிள் எடுத்து கொண்டு நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன், நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் அவர்களது உறவினர் வீடுகளில் தேடிவந்தனர். இந் நிலையில் இன்று காலை புழல் ஏரிக்கு நடைபயிற்சிக்கு செல்வோர் ஏரியில் சிறுவன் ஒருவனின் சடலம் மிதப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் காணாமல் போன சிறுவன் காவாங்கரை பகுதியை சேர்ந்த ரூபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து செங்குன்றம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *