August 3, 2021

சேலத்தில், பரமக்குடிையை சேர்ந்த 5 ம் வகுப்பு மாணவிக்கு, சிங்கம்பெண் 2021 விருது வழங்கப்பட்டது…

1 min read

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஜவஹர் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் _ பிரியா தம்பதியர்களின் செ மகள் ந.ஹன்சிகா (10). இவர் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி ந.ஹன்சிகா பெருமாள் மீது ஆண்டாள் கனவில் காதல் கொண்டு பாடும் திருப்பாவை பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல கட்டுரையாக எழுதி அசைத்துவதில் திறமை படைத்தவர்.
அவர் கடந்த 2020-ம் ஆண்டு மாவட்ட அளவில் ராமநாதபுரத்திலும், மாநில அளவில் சென்னையில் தேர்வு பெற்று, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விருது வழங்கி கெளரவித்தார்.

மேலும், 2021- ஆண்டும் மாநில அளவில் தேர்வு பெற்று பிரகாசமாக திகழ்ந்தார். அதன் அடிப்படையில், உலக மகளிர் தினத்தன்று, சேலம் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி விழா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ந .ஹன்சிகாவிற்கு சிங்கம் பெண் 2021 என்ற விருதும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் . சிங்கம்பெண் 2021 விருது பெற்ற மாணவி ந .ஹன்சிகா பரமக்குடி செய்தியாளர்களிடம் தனது மனம் பூரித்த அனுபவங்களை உள்ள மகிழ்வோடு சர… சரவென … சீறிப்பாயும் அலைகள் போன்று சொல்லி மகிழ்ந்தார்.


நான் திருப்பாவை கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் தேர்வு பெற்று உலக மகளிர் தினத்தன்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் சிங்கம்பெண் 2021 விருது பெறுவதற்கு எனது தாயார் பிரியா எனது ஆர்வத்தை புரிந்து கொண்டு படிப்பு நேரம் தவிர காலை, இரவு நேரங்களில் பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தி வந்தார்கள். நான் 3-ம் வகுப்பு படிக்கும் போது இருந்து பள்ளியில் நடைபெறும் கட்டுரை, பேச்சு போட்டிகளில் பங்குபெற்று பற்பல விருதுகள், கேடயங்கள். சான்றிதழ்கள் பெற்று சிறப்பிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு.
எனது முயற்சிக்கு பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர், துணை முதல்வர், வகுப்பு ஆசிரியைகள் எனக்கு அவ்வவ்போது ஆலோசணைகள் வழங்கி ஊக்கப்படுத்தி வந்தார்கள்.

மேலும், எனது தகப்பனார் நந்தகுமார், தாத்தா கதிரேசன், பாட்டி லலிதா, சித்தப்பா கார்த்திக், சித்தி சுகன்யா, உடன் பிறந்தவர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள் , வகுப்பு தோழிகள் பலரும் உற்சாகப்படுத்தி வந்ததால், நான் சிறப்பு பெற முடிந்ததென மனம் திறந்து பேசினார். ஹன்சிகா விருது பெற்ற தகவல் அறிந்து நகர் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், மகளிர்கள், பெரியோர்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர். கல்வி கற்பதோடு தனது தனித்திறமையை வெளிப்படுத்துவதில் ஹன்சிகாவைப் போன்று தங்களது சிறுவயது முதலுமே, பள்ளி – கல்லூரி பயிலும் மாணவர் – மாணவியர்கள் அனைவரும் மன உறுதி எடுத்து செயல்படுத்தினால் தமிழகம் சிறந்து விளங்கும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

செய்தியாளர் – மா.மு.ஜெயக்குமார்.
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed