திமுக தலைமையின் தவறான முடிவால், பொன்னேரி தொகுதியை திமுக தொடர்ந்து இழந்து வருகிறது…
1 min read
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது தொகுதியாக இருப்பது பொன்னேரி சட்டமன்ற தொகுதி, இது தனி தொகுதியாகவும் இருந்து வருகிறது.
பொன்னேரி தொகுதி பெரும்பாலும் எப்போதும் அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கிறது, என பெரும்பாலானவர்களின் கருத்தாகவும் இருந்து வருகிறது.
இதற்கு காரணம் தொடர்ந்து பலமுறை அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது தான்.

பொன்னேரி தொகுதி 90களுக்குப் பிறகு திமுகவிற்கு சாதகமாக வளர்ந்து வந்த நிலையில், அப்போதைய அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் இடையே இருந்த மோதல் காரணமாக பொன்னேரி தொகுதி படிப்படியாக பல கட்டங்களில் திமுகவிற்கு பலம் குறைந்து போனது. உதாரணத்திற்கு, கடந்த 3, 4 சட்டமன்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர்களை நிறுத்தினாலும் அக்கட்சியில் உள்ள உட்பூசல் காரணத்தினால், திமுக தொடர்ந்து வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறது.

ஆனால், இப்போது உள்ள சூழ்நிலையில் அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ள பலராமன் பலமான வேட்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த தொகுதியை திமுக நேரடியாக களம் காண்டால் மட்டுமே, வெற்றி வாய்ப்புக்கு வழி வகுக்கும். ஆனால் தற்போது காங்கிரசுக்கு வழங்கப்படும் நிலையில், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பலராமன் அவர்களே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால், திமுக நேரடியாக வேட்பாளரை நிறுத்தினால், கண்டிப்பாக இந்த பொன்னேரி தொகுதியில் திமுக வெற்றி பெற வழிவகுக்கும். காரணம், தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், மக்களின் மனநிலை பல விதங்களில் மாற்றத்தில் உள்ளது.

உதாரணத்திற்கு, 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் வேணுகோபால் அவர்கள் பொன்னேரி தொகுதியில் சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். அடுத்து வந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பலராமன் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 82 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார். இந்தக் பெருந்த வித்தியாசத்திற்கு காரணம், அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தான்.
இந்த வித்தியாசங்களை வைத்துப் பார்த்தாலே பொன்னேரி தொகுதியின் தற்போதைய நிலைமை திமுகவின் தலைமைக்கு தெளிவாகத் தெரியும்.
பொன்னேரி தொகுதியை திமுக தவிர காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால், வெற்றி என்பது கடினம் தான், என்பது இத் தொகுதி மக்களுடைய கருத்து.
G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777