திருவண்ணாமலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நாதஸ்வர கலைஞர்களின் இசை அர்ப்பன நிகழச்சி நடத்தப்பட்டது…
1 min read
பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழாவினையொட்டி ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாளில் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பு நாதஸ்வர கலைஞர்களின் இன்னிசை கச்சேரி மற்றும் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தின் சார்பில் 39 ஆம் ஆண்டாக மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 நாதஸ்வர கலைஞர்கள் கலந்து கொண்ட நாதஸ்வர இசைவிழா திருக்கோயில் முன்பு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் சங்கராபரணம், காம்போதி, ஆனந்தபைரவி உள்ளிட்ட பல்வேறு ராகங்களை இசைத்து அண்ணாமலையாருக்கு இசை அர்ப்பணம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி வலம் வந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 893947677