August 3, 2021

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிப்பது, அடிப்படை வசதிகள் குறித்து, தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்…

1 min read

வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தமிழ்க சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது தேர்தல் பணியில் ஈடுப்படுத்துவது வழக்கம், ஒவ்வொருமுறையும் மூன்று பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் பிறகு வாக்கச்சாவடி மையத்திற்கு பணி வழங்குவார்கள் , இதன் இடையே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிக்க இதுவரை சரியான முறையில் வசதிகள் ஏற்படுத்தி தருவதில்லை , இதன் காரணமாக மேனிலைப்பள்ளி உயர்நிலைப.பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது , உயர்நீதிமன்றம் தேர்தலில் ஈடுப்படும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளித்து அனைவரும் 100% விழுக்காடு வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கின்றோம்.
உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்தல் பணியில் ஈடுப்படும் அனைவரும் வாக்களிக்க வேண்டுமானால் தேர்தல் பயிற்சி நடத்தும் அலுவலரே சான்றொப்பமிட்டு படிவத்துடன் தபால் வாக்கு சீட்டு வழங்கி சுய கையோப்பம் பெற்று வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய முடியும் எனவும்,

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு இரவுகள் தேர்தலில் மையத்தில் தங்கி பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது ஆகவே அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டோர் அனைவரையும் தேர்தல் பணியில் அமர்த்தக் கூடாது எனவும், தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுடைய சொந்த பகுதியிலிருந்து குறைந்த தொலைவில் அவர்கள் பணியாற்றும் வகையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் அருணன் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 893947677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed