August 3, 2021

திருவண்ணாமலையில், மாசி மாத மயானக்கொள்ளை திருவிழா விமர்சியாக நடைபெற்றது…

1 min read

திருவண்ணாமலையில் சிவராத்திரி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மாசி மாத அமாவாசை தினமான இன்று, மயானகொள்ளை திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. மயான கொள்ளை திருவிழாவையொட்டி, அங்காளம்மன், மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, பலர் அங்காளபரமேஸ்வரி வேடம் தரித்து, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
வேலூர் சாலை அருகில் உள்ள ஈசானிய மைதானத்தில் உள்ள மயானத்தில், மயான கொள்ளை திருவிழா மாலையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed