April 20, 2021

போடிநாயக்கனூரில் பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்…

1 min read

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக போடிநாயக்கனூர் வந்த பொழுது கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் வெற்றி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக சென்ற போது வழி நெடுகிலும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி ஆர் பார்த்திபன் போடிநாயக்கனூர் நகர செயலாளர் பழனிராஜ் போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

.

செய்தியாளர் – அழகர்
நிழல், இல் – 8939_76777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *