April 20, 2021

திருவள்ளூர் மாவட்டம் அத்தி காவனூர் பகுதியில், தொடர்ந்து நடந்து வரும் மணல் திருடி தடுக்க வேண்டி, கிராம மக்கள் கோரிக்கை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அத்திங்கிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான இடம் தண்டுமேடு பகுதியில் சுமார் 11 ஏக்கர் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு குவாரி இயங்கி வந்தது அதற்கு பின் இந்த நிலத்தில் ஆடு மாடுகள் கால்நடைகள் மேய்க்க பயன்படுத்தி வந்தனர்.

இந் நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் ஜே.சிபி இயந்திரங்கள் வைத்து அதிகாரிகள் துணையோடு மணல் எடுப்பதாகவும், இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது போன்ற சம்பவங்கள் பல முறை இப்பகுதியில் நடந்து கொண்டிருப்பதாகவும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *