August 3, 2021

ஊத்துக்கோட்டையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அண்ணா நகர் பகுதி அருகே, தமிழக-ஆந்திர எல்லையில், காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டருந்தனர். அப்போது ஆந்திர பதிவெண் கொண்ட கார் ஒன்று ஆந்திராவை நோக்கி சென்ற போது, அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக சுதாரித்த காரை ஓட்டியவர், காரை நிறுத்தி விட்டு, உடனிருந்தவரையும் கீழே இறக்கி அணைக்க முயன்றனர், அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸார், காரின் முன்பக்கம் எரிவதை கண்டு ஓடிப்போய் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துடன் காரும் முழுமையாக சேதம் அடையாமல் போனது.

காவல் துறையினரின் விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாச மூர்த்தி(56) என்பதும், அவருடன் லஷ்மணன் என்பவரும் பயணித்ததும் தெரியவந்துள்ளது. சென்னைக்கு சென்று விட்டு புத்தூர் செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், யாருக்கும் காயம் இல்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed