கொளத்தூர் தொகுதியில், தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்…
1 min read
வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மனுத் தாக்கல்
செய்யலாம் என, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி அன்று பலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3ஆவது முறையாகக் களமிறங்குகிறார். முன்னதாக திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று, திமுகவின் தலைவர் ஸ்டாலின் உட்பட சேப்பாக்கம் தொகுதியில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தியாளர் – ஜோதி
நிழல். இன் – 8939476777