August 3, 2021

பொன்னேரி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்…

1 min read

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளராக துரை சந்திரசேகரன் அவர்கள் போட்டியிடுகிறார். துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற்று, அவர்களுடைய ஆதரவை பெற்றார்.

அதன்படி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் அவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது ரமேஷ் ராஜ் அவர்களுக்கு வேட்பாளர் துரை சந்திரசேகர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். அப்போது திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகிகள் தடபெரும்பக்கம் ராஜா, தன்சிங், சேகர், இ.மணி, தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், மாலையில் நடைபெற்ற மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில், திமுக கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகரை அறிமுகப்படுத்தியும், தேர்தலில் பணியாற்ற வேண்டிய விதங்கள் குறித்தும், ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

அதேபோல், அத்திப்பட்டு ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கதிர்வேல் அவர்களை சந்தித்து வேட்பாளர் சந்திரசேகர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார். அப்போது கதிர்வேல் அவர்கள் தலைமையில் அத்திப்பட்டு ஊராட்சி சார்பில், துரை சந்திரசேகருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் மீஞ்சூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம் அவர்களை, அவருடைய இல்லத்திற்கு நேரடியாக சென்று திமுக கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகர் சந்தித்தார். அப்போது பாஸ்கர் சுந்தரம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை பெற்றார். அவருடன் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் உடன் சென்றிருந்தார்.

பொன்னேரி பகுதி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற, திமுக கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகர், நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியினரை சந்தித்து சால்வை அணிவித்தார். மாவட்ட செயலாளர் கோபால் மூத்த நிர்வாகிகள் கலாம், அனீப், பாண்டியன், ஜெயவேலு, பாலமுருகன், மதன் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும், தேர்தல் பணி குறித்து ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோபி நாயனார் அவர்களை, திமுக கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று ஆதரவு திரட்டினார். அப்போது, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ், தன்சிங், அமரகவி, அபூபக்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சோழவரம் ஒன்றிய திமுக சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகர் அவர்களுக்கு, ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் சிறப்பான வரவேற்பு அளித்தார். அப்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் செல்வசேகர் மற்றும் வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோர், தேர்தல் பணி குறித்து திமுக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed