April 20, 2021

“கலைஞர்” பெயரால், உறுதிமொழி எடுத்து வேட்புமனு தாக்கல் செய்த, கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர்…

1 min read

கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரோடு புதுவாயலில் இருந்து ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலத்தில் கலைஞர் பெயரில் உறுதிமொழி ஏற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், புதுவாயலில் இருந்து முன்னாள் எம்எல்ஏ திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு, முன்னாள் எம்எல்ஏ திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர்,

தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி உள்ளிட்ட திமுகவினர், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரோடு ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரனுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் ஜி.பாலகுருவிடம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஏ.என்.குமார் முன்னிலையில், வேட்பு மனுதாக்கல் செய்யும் போது மறைந்த திமுக தலைவர் கலைஞர் பெயரில் உறுதி மொழி ஏற்றார்.

தொடர்ந்து மனுதாக்கல் செய்து வந்த திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி துளசிநாராயணன் தலைமையில் அக்கட்சியினரும், காங்கிரஸ் துணை செயலாளர் சம்பத் தலைமையில் அக்கட்சியினரும் , இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அருள் தலைமையில் அக்கட்சியினரும், திமுக நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், ராமஜெயம், கி.வே.ஆனந்தகுமார்,ஹரிதாஸ், ஜெயச்சந்திரன், உள்ளிட்ட பலர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் தந்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *