April 20, 2021

திருவண்ணாமலையில், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்….

1 min read

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம் இன்று கோட்டாட்சியர் வெற்றிவேலுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலையில், திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து அப்பகுதி தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இன்று 6-வது வார்டு சார்பாக BLA-2, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்,
மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது.

கலசபாக்கம்தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர்
பன்னீர்செல்வம் தனது பிரசாரத்தை இன்று தொடங்கும் முன்பு, அ.தி.மு.க.அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் ஒளிபரப்ப செல்லும் டிஜிட்டல் தொழில் நுட்ப வாகனத்தில் படக்காட்சிகளை தொண்டர்களுடன் பார்த்து ரசித்தார்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் சார்பில், போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எஸ். தணிகைவேல் அவர்களை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *