April 20, 2021

மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்ஃபேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரி சார்பில் புதிய கல்விக்கொள்கை குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரிமுதல்வர். முனைவர்.வே.நாகஜோதி, பேராசிரியர்கள் மோகன், ராஜேஷ் கண்ணா, சுதா, திருநெல்லை ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் புதிய கல்வி கொள்கை குறித்தும், மாணவர்களுக்கு அதில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *