August 3, 2021

அதிமுக கூட்டணியில், 234 தொகுதியிலும் பாஜக தான் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது, மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் பேச்சு…

1 min read

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு குறைவான இடங்களைப் கொடுக்கப்பட்டிருக்கிறது, என பலர் கூறலாம். ஆனால், “அதிமுக கூட்டணியில் 234 தொகுதியிலும் வேட்பாளராக போட்டியிடுபவர்கள் அனைவரும் பாஜக வேட்பாளர் தான்” என, கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனையும், பொன்னேரி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை யும் ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பிரச்சர கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ கி.வேணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தல் காலங்களில் மக்களை உரிமையோடு சந்திக்கும் தைரியம் திமுக தலைவராகிய தனக்கு உள்ளது, ஏனெனில் கட்சியில் 13 வயதில் உழைக்க துவங்கி படிப்படியாக முன்னேறி 50ஆண்டு கால உழைப்பில் தற்போது திமுக தலைவர் பதவி வகிப்பதாகவும், மக்கள் மன்றத்தில் படிப்படியாக வளர்ந்து துணை முதல்வர் பதவியை தாண்டி தற்போது எதிர்கட்சி தலைவர் பதவி வரை வந்துவிட்டேன். அந்த உரிமையோடு மக்களிடம் ஓட்டு சேகரித்து வருகிறேன் என்றவர் தற்போது மக்கள் முன் தான் முதல்வர் வேட்பாளராக நிற்பதாக கூறினார்.

மேலும், பேசியவர் தமிழத்தில் மக்களின் அறிவு கண்ணை திறந்தவர் காமராஜர் எனவும், தமிழக மக்களை தலைநிமிர நடக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி என, பெரியார் கூறினார் . என, சுட்டி காட்டியவர் கலைஞர் கருணநிதி ஆட்சியில் தான் விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மாற்றுதிறனாளிகள், திருநங்கைகளுக்கு நலவாரியம், கிராம தேவைகளை தீர்க்க அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அனைத்து சாதியினரும் சமமாக வாழ சமத்துவபுரங்கள், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கர்ப்பிணிகளுக்கு, விதவைகளுக்கு உதவி , மகளிர் தலைநிமிர்ந்து நிற்க மகளிர் குழுக்களுக்கு நிதியுதவி, திருமண உதவி தொகை, உழவர் சந்தை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, போன்ற பல திட்டங்களால் தாய் தன் குழந்தைகளை பார்ப்பது போல கலைஞர் தமிழக மக்களை பார்த்துக் கொண்டார். இப்படி கலைஞரின் 5 முறை ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் தமிழக முதல்வர் எங்களை போல சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடிவதில்லை என்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காபி அதிமுக தேர்தல் அறிக்கை என்றும், அதிமுக தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாத திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 5மாதங்களாக வல்லுனர்கள் அடங்கிய தனிகுழு அமைத்து திமுக தேர்தல் அறிக்கை அறிவித்தால், அதை நகலெடுத்து அதிமுக தனது தேர்தல் அறிக்கையாக தருகிறது என்றும், திமுக தேர்தல் அறிக்கை மட்டுமே நடக்கும் என தமிழக மக்களுக்கு தெரியும், கடந்த 10ஆண்டு கால ஆட்சியில் அதிமுக தானே இருந்தது, அப்போதெல்லாம் பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல் தேர்தலை கணக்கில் கொண்டு பயிர் கடன் தள்ளுபடி அறிவித்தது ஏன் என்றவர், அதிமுக அரசு 16ஆயிரம் கோடி பயிர் கடன் என அறிவித்து 5அயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ள நிலையில், எஞ்சிய 7ஆயிரம் கடன் திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும் என்றவர் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் , அரசு கஜானாவில் பணம் இல்லை, புயல் மழை வெள்ள பாதிப்பு இல்லை என்பதால் பயிர் கடன் தள்ளுபடி இயலாது என உச்சநீதி மன்றத்தில் அதிமுக அரசு வழக்கு தொடுத்ததை தமிழக மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் பேசியவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் 5சவரன் வரை அடகு வைத்த நகை மீட்கப்படும் என பொய் வாக்குறுதியை தந்து திமுக வெற்றி பெற்றதாக கூறிய முதல்வர் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அதே தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு இருப்பது முரணாக உள்ளது என்றார்.

கலைஞர் சொல்வதை போல சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதன் வழிநின்று, திமுக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது என்பதால், திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றவர், நீட் தேர்வின் கோரப்பிடியில் தமிழகத்தில் அரியலூர் அனிதா துவங்கி 14மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். என்றும், தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என திமுக தலைமையில் அனைத்து கட்சியினர் தீர்மானம் இயற்றிய நிலையில் ஆளும் அதிமுக அரசு இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை என குற்றம் சாட்டிவர், தமிழகத்தில் அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வை திமுக ஆட்சியில் கட்டுப்படுத்தப்படும், காலியாக உள்ள 3.5லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு புதிதாக 2லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

கொரோனா தொற்று ஆபத்து குறித்து திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் பேசிய போதும், மாஸ்க், கையுறை கேட்ட போதும் அதிமுக ஆட்சியில் கொரோனா வராது என கேலி பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மறுநாளே மாஸ்க்போட்டுக் கொண்டார், பொதுமக்களை வெளியில் வந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், இந்த அறிவுரையை அண்ணனாகவும், தம்பியாகவும், ஒரு மகனாகவும் தமிழக மக்களுக்கு தெரிவிப்பதாக கூறியவர், கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதால் பொதுமக்கள் கட்டாயம் வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கரோனா தடுப்பூசி ஆபத்து இல்லாததால் அதனை போட்டுக் கொள்ள மக்கள் தாமாக முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பேசியவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும், கும்மிடிப்பூண்டி வரை மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும், கும்மிடிப்பூண்டியில் கூட்டு குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் விரிவுபடுத்தப்படும், எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பேட்டையும், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என உறுதி அளித்தார்.

இறுதியாக, திமுக 200தொகுதிகள் வெல்லும் என்கிற நிலையில் தற்போதைய சுற்றுபயணத்தின் மூலம் திமுக 234தொகுதியையும் வெல்லும் என தெரிந்து கொள்ள முடிந்தது. என்றவர், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வென்ற ஒரே எம்பி ரவிந்திரநாத் குமார் பாஜக எம்பியாக செயல்படும் சூழலில், திமுக தலைவர் கருணாநிதி இறந்த போது அவரை அவர் பெரிதும் விரும்பும் தலைவரான அண்ணா சிலைக்கு பக்கத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசிற்கு தமிழக மக்கள் ஒரு இடத்தையும் தர கூடாது என்றார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed