அமைந்தகரையில், அனைத்து கட்சியினர், ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டத்தை, போலீசார் நடத்தினர்…
1 min read
இன்று மாலை 5 மணி அளவில் , அமைந்தகரை அகர்வால் திருமண மண்டபத்தில், சென்னை அண்ணா நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஜவஹர் தலைமையில் , அனைத்துக் கட்சியினர் ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், அண்ணா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட, கொளத்தூர், ராஜமங்கலம், வில்லிவாக்கம், திருமங்கலம், ஜெஜெ நகர், நொளம்பூர், கோயம்பேடு, மதுரவாயல், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, ஆகிய காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட, அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளும் கட்சியை சார்ந்த உறுப்பினர்களும், நிர்வாகிகளும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், மேலும் அவர்கள் தரப்பிலிருந்து ஆலோசனை மற்றும் கருத்துகளையும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில், காவல் துறை சார்பாக, அண்ணாநகர் மாவட்ட துணை ஆணையர் (DC ), வில்லிவாக்கம் உதவி கமிஷனர், அண்ணாநகர் உதவி கமிஷனர், ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், மற்றும் இந்த காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக, கொளத்தூர் மேற்கு பகுதியின், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் நா. முத்துவேல், வழக்கறிஞர் பிரிவு சென்னை கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் சீனிவாசன், 65 அ வட்ட செயலாளர் வாசுதேவன், 65 வட்ட பொருளாளர்
P. G. போத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜோதி
நிழல். இன் – 8939476777