April 20, 2021

பொன்னேரி அருகே, கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தை வழி மறித்து தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு, கிராம மக்கள் சாலை மறியல்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த, காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர்
யுவராஜ். இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது, காட்டாவூர் பேருந்து நிலையம் அருகே சிலர் யுவராஜை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டியதால் செய்வதறியாது நின்ற யுவராஜ் அங்கிருந்து வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

உடனடியாக, அந்த வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தை அங்கேயே தீயிட்டுக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. இது குறித்து, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல் துறையினர் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கஞ்சா போதையில் இருந்ததும், அதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து, பொன்னேரி காவல் துறையினர் வாழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *