April 20, 2021

மாதவரம் தொகுதி வேட்பாளர் எஸ் சுதர்சனத்தை ஆதரித்து, திமுக கூட்டணி சார்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி துவங்கியது..

1 min read

மாதாவரம் தொகுதி
வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதிஷ்குமார் , வெள்ளானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி ஆகியோர் தலைமையில் , திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

அதில், பாரதி நகர் கிளை செயலாளர் பாலா மற்றும் கிளை நிர்வாகிகள், புதிய வெள்ளானூர் பகுதியில் கழக தலைவர் தளபதி அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள், மற்றும் “ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு” என்ற வாசகம் பதிக்கப்பட்ட வட்ட வடிவ ஸ்டிக்கர் வீடு, வீடாக சென்று ஒட்டபட்டது, இன்றைய அதிமுகவின் மோசமான ஆட்சியை பற்றியும், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிவிப்புகள் பற்றியும் எடுத்துரைத்து, மாதாவரம் தொகுதி வேட்பாளர் மாதாவரம் எஸ். சுதர்சனம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.

சென்னை வட கிழக்கு மாவட்டம் மாதாவரம் தெற்கு பகுதி 24 வது வட்ட திமுக சார்பாக, மாதவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாதாவரம் S.சுதர்சனம் அவர்களை பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்ய கூட்டணி கட்சிகளின் வட்ட ஆலோசனை கூட்டம் வட்ட அவைத் தலைவர் P. மாரிமுத்து தலைமையில் சூரப்பட்டு பகுதியில் நடந்தது.

வட்டச் செயலாளர் E.ஏழுமலை முன்னிலையில் மாவட்ட பிரதிநிதிகள் துரை ஸ்ரீராமுலு S.K.அன்பழகன் D.ரமணன் சண்முகபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தனர். அப்போது கூட்டணி கட்சிகளை சார்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் விடுதலை சிறுத்தை மதிமுக போன்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் மற்றும் திமுக மாவட்ட கழக, பகுதி கழக ,மாவட்ட கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் தெற்கு பகுதி 31வது வட்ட கழக திமுக சார்பாக, மாதவரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய 31வது வட்ட கழக சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, சென்னை வடகிழக்கு மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். உடன் 31வது வட்ட கழக செயலாளர் பிரேம்குமார் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் வட்ட நிர்வாகிகள், வட்ட இளைஞர் அணியினர், மாணவர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பாகமுகவர்கள், அனைத்து நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை வட கிழக்கு மாவட்டம் மாதாவரம் தெற்கு பகுதி 32வது வட்ட திமுக சார்பாக, மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதாவரம் S.சுதர்சனம் அவர்களை பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்ய கூட்டணி கட்சிகளின் 32 வது வட்ட ஆலோசனை கூட்டம், அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில், கூட்டணி கட்சிகளை சார்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 32வது வட்டத்தில் செய்யப்பட வேண்டிய, தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர்.

நிழல். இன் – 8939476777

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *