April 20, 2021

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில், தேர்தல் பறக்கும படையினரின் வாகன சோதனையில் 7,92,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது…

1 min read

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் அருமந்தை என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேன் ஒன்றை சோதனையிட்ட போது, அதில் கட்டுக்கட்டாக 500 நோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், பொன்னேரி வட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வடிவேல் மற்றும் லஷ்மிநாராயணன் ஆகியோர் பொன்னேரிக்கு பத்திரப்பதிவுக்காக 7,92,500 ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை சீல் வைத்த அதிகாரிகள், பொன்னேரி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

நிழல் . இன் : 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *