April 20, 2021

தமிழக தேர்தலில், கடைசியில்… முதலிடம் வரப்போவது, யார்? மக்கள் முடிவு செய்துவிட்டனர்…

1 min read

தமிழகத்திற்கு சட்டசபை சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள், புதிதாக உருவெடுத்துள்ள கட்சிகள், என பல கட்சிகளும் ஒன்று இணைந்து தற்போது ஐந்து முனை போட்டியாக நிலவி வருகிறது.

தமிழக தேர்தலில் கட்சிகள் அமைத்துள்ள ஐந்து விதமான கூட்டணிகளில், யார்? ஆட்சி அமைப்பார்கள் என நிலவும் கடும் போட்டியில், வெற்றி பெற்று எந்த கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர். அதிலும், வாக்காளர்கள் எந்த விதமான முடிவை எடுக்க போகிறார்கள் என்று, தமிழக தேர்தல் களத்தில் நின்றிருக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் மிகப்பெரிய அளவில் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியையும், புதிதாக உருவான கட்சிகள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இரண்டு கட்சிகளையும், குறை கூறி வருகின்றனர். இப்படி பலவிதமான கருத்து மோதல்கள் அனைத்தும் மக்கள் இடையே கடந்து சென்று வந்தாலும், மக்கள் ஒரு முடிவை தீர்க்கமாக எடுத்திருப்பார்கள் என்பது, நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதன்படி, தமிழகத்தில் தற்போது நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில், ஐந்து முனையில் நிற்கக்கூடிய கூட்டணியில், யார்? எந்த அளவிற்கு வாக்கு பெற்று வெற்றி பெறுவார்கள். யார்? ஆட்சி அமைப்பார்கள் என்று வரிசைப்படுத்த நான் முயற்ச்சித்தேன். அதன்படி, தபால் ஓட்டு போடக்கூடிய முதியவர்கள் முதல் இந்தத் தேர்தலில் முதல் முதலில் வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்கள் வரை, நான் கலந்துபேசி எடுத்த முடிவை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதனடிப்படையில், இந்த தேர்தலில் ஐந்து
கூட்டணிகள் போட்டியிடுகின்றன. திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் , அமமுக தலைமையில் ஒரு கூட்டணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் கட்சியான நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.

மக்களின் கருத்துப்படி, வரிசைப்படுத்தியதில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிப்பதில் திமுக அல்லது அதிமுக இடையே தான் போட்டி நிலவுகிறது. அதேபோல், மூன்றாவது இடத்தை தினகரன் தலைமையில் இருக்கக்கூடிய அமமுக தான் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெளிவாக தெரிகிறது. அடுத்ததாக, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்திற்கு, மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் கடுமையாக போட்டியிடுகின்றன. அதிலும், மிக முக்கியமாக தனிப்பட்ட முறையில் இந்த இரு கட்சிக்கும் வாக்களிக்க கூடிய புதிய வாக்காளர்களிடம் தெளிவாக விசாரித்ததில், நான்காவது, நாம் தமிழர் கட்சியும், ஐந்தாவது இடத்தை மக்கள் நீதி மையமும் பிடிக்க வாய்ப்பு உள்ளது என தெளிவாக தெரிகிறது.

இதன்படி பார்த்தால், தமிழகத்தில் நடைபெறக்கூடிய இந்த தேர்தலில், கடைசியில் முதலிடம் பிடிக்க போவது, “மக்கள் நீதி மையம்” என்பது உறுதியாகிறது.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *