August 3, 2021

திருவள்ளூரில், திருமணமான ஒரு மாதத்திலேயே, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீஸில் சரண்…

1 min read

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவர் சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந் நிலையில், ஆலந்தூர் பகுதியை சேர்ந்த விவாகரத்தான மகேஸ்வரி என்ற பெண்ணிடம்‌ கோபிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மகேஸ்வரியை கோபி திருமணம் செய்துள்ளார்.

பிறகு மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். நேற்றிரவு கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அதில், ஆத்திரமடைந்த கணவன் கோபி மனைவி மகேஸ்வரியை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இரவு முழுவதும் மனைவின் சடலத்துடன் இருந்தவர் விடியற்காலை அங்கிருந்து மணவாளநகர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார்.

.

பிறகு அவரை மணவாளநகர் போலீசார் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சடலமாக கிடந்த மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed