April 20, 2021

கொளத்தூர் தொகுதியில், தேவ ஜவகர் கிறிஸ்தவ ஆலயங்களில் வாக்கு சேகரித்தார்…

1 min read

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை ஆதரித்து, சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரும், 65 வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினருமான, தேவ ஜவகர் அவர்கள் சீனிவாச நகரில் அமைந்துள்ள, டான் பாஸ்கோ கிறிஸ்தவ ஆலயத்தில், வாக்குகள் சேகரித்தார்.

அதேபோல், மேலும் அப்பகுதிகளில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் நேரடியாகச் சென்று கிறிஸ்தவ மக்களிடம், தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சி அமைந்திட, திமுக கூட்டணியின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டி கோரினார்.

மேலும், முதல்வர் வேட்பாளரான மு க ஸ்டாலின் அவர்களை இந்த தொகுதியில் இருந்து நாம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து கோட்டைக்கு அனுப்பினால் நம்முடைய தொகுதி முதல்வர் தொகுதி என்றும், தமிழகத்திலேயே ஒரு சிறப்பு அந்தஸ்து பெற்ற தொகுதியாகவும் திகழும், அதன் மூலமாக, அவருடைய மேற்பார்வையில் நமக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகள், மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவும் கூறி வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன் பகுதி பொருளாளர் நாகராஜ், வட்ட செயலாளர்கள் முருகன், வாசுதேவன் மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், மற்றும் வட்ட மாணவர் அணி நிர்வாகி அழகேஷ், அவைத்தலைவர் மதுரை, வட்ட துணைச் செயலாளர்கள் குமார், கிரிஜா, வட்ட பொருளாளர் போத்தி, பகுதி பிரதிநிதிகள் அனீப், சுதாகர், தேவராஜன், ஞானசேகரன், ஆறுமுகம், லட்சுமி, ஹரி கிருஷ்ணன், லோகேஷ், வளர்மதி, செல்வபிரபு, நிர்மல், இர்ப்பான், சரவணன், மணி,

மற்றும் பாக முகவர்கள் மணி, சுதர்சனம், ராமன், பரத், பிரகாஷ், சுரேஷ், குமார், குமரகுருதாசன், சாய்பிரசாத், விஜயா, விஜய், விஷ்வமோகன், தோட்டம் பாபு, சிவகுரு, வினோத், டிஎம்கே ஜோதி, வேலுபழனி, மற்றும் அப்பகுதி அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இளைஞர் அணி, மாணவரணி ,மகளிர் அணி, திமுகவினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜோதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *