August 3, 2021

பொன்னேரி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துரைசந்திரசேகர் தீவிரமாக வாக்கு சேகரித்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்றத்திற்கு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர், பாஸ்கர் சுந்தரம், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, மேலூர் நிலவழகன், கோளூர் கதிரவன், தன்சிங், ஆகியோர் உட்பட திமுக நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். துரை சந்திரசேகர்
நந்தியம்பாக்கம் மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி, கொண்டகரை, வெள்ளிவாயல்சாவடி, ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியபோது, நமது பொன்னேரி சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணியின் சார்பில், நான் போட்டியிடுகிறேன், மதசார்பற்ற கூட்டணியான எங்கள் கூட்டணி தமிழகத்தில் மக்கள் அனைவரையும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருந்திடுவும், வாழ்ந்திடுவும், பாடுபடும் எனவும் மேலும், எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை தேவைகளை செய்வதுடன், வளர்ச்சிப் பணிகளையும் அதிக அளவில் மேற்கொள்ள தீவிரமாக பாடுபடுவேன். என, உறுதி அளித்தார்.
மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் நம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட வழி செய்திடுவேன். எனவும் உறுதியளித்தார்.

வேட்பாளர் துரை சந்திரசேகர் பிரச்சாரம் செய்து வரும் போது அவருக்கு, மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நந்தியம்பாக்கத்தில், ஊராட்சி செயலாளர் ஜோதி தலைமையில், ஏ. கார்த்தி, வழக்கறிஞர் நிலவழகன், செல்வமணி, மாறன், எஸ் கார்த்திக், ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் அதேபோல்,

அத்திப்பட்டு பகுதியில், எம் டி ஜி கதிர்வேலு அவர்கள் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், ரவி, செல்லையா, பன்னீர் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க மிக சிறப்பான வரவேற்பளித்தனர். அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், ரஞ்சனி, சங்கர், சுமதி சங்கர் ஆகியோரும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

வல்லூரில், எஸ் கே சேகர் தலைமையில் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ரவி, தமிழரசன், ரானமூர்த்தி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலூர் பகுதியில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நிலவழகன் அவர்கள் தலைமையில் நெல்சன், துணை தலைவர் செந்தில், குமார் ஆகியோர் உட்பட மற்றும் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

கொண்டகரை பகுதியில், கலைவாணன், வெஸ்லி, இளைஞரணி கணேசன், ஒன்றிய கவுன்சிலர் ஆர் என் ரமேஷ், வழக்கறிஞர் கனகசபை, ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர். வெள்ளிவாயல்சாவடி பகுதியில், மோகனசுந்தரம், மெய்யழகன், தமிழரசன், பிரகாஷ் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

காட்டுப்பள்ளி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் ராஜி, ரஞ்சித், வினோத், காளாஞ்சி டில்லி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

நிழல். இன் – 8949476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed