மாதவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ் சுதர்சனம் பிரச்சாரத்தின் போது, எம்ஜிஆர் பாடல் பாடி வாக்குகள் சேகரித்தார்…
1 min read
சென்னை மாதவரம் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் மாதவரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.சுதர்சனம் அவர்கள் மாதவரம் தொகுதியில் அடங்கிய மூலக்கடை மற்றும் அதை சுற்றியுள்ள பொன்னியம்மன்மேடு, திருமலை நகர், உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். அவருக்கு அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.

கூட்டணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் நின்றபடி சுதர்சனம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி பல பொய்களை சொல்லி வாக்குகள் சேகரிப்பதாகவும், பல பொய்கள் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும் கூறினர்.

அதிலும், குறிப்பாக எம் ஜி ஆர் திரைப்பட பாடலான, “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை ராகத்துடன் பாடினார். அதில், எடப்பாடி பழனிச்சாமி பல,பல பொய்கள் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். என்ற அர்த்தத்தில் அந்த பாடலை மாற்றி மெட்டு அமைத்து பாடி, மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செலுத்தியதுடன், அவருடைய பாடலை ரசித்து மகிழ்ந்தனர்.
நிழல். இன் – 8939476777