April 20, 2021

திமுக, அதிமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் தினகரன் குற்றச்சாட்டு…

1 min read

திமுக, அதிமுக இருகட்சிகளும் பணத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகளையும், தொண்டர்களையும் நம்பி, தேர்தலில் போட்டியிடுவதாகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் T.T.V.தினகரன் திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எ.ஜி.பஞ்சாட்சரம் மற்றும் செங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அன்புவை ஆதரித்து தினகரன் திருவண்ணாமலை நகரில் வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது தினகரன் பேசுகையில், திமுக,அதிமுக இரு கட்சிகளும் மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை, இந்த இரு கட்சிகளும் பணத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறார்கள், ஆனால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகளையும், தொண்டர்களையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறது

நடைமுறை சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை திமுகவும், அதிமுவும் அறிவித்துள்ளனர்.1000 ரூபாய் முதியோர் உதவி தொகை வழங்க முடியாத அதிமுக மாதம் 1500 ரூபாயும், திமுக மாதம் 1000 ரூபாய் எப்படி வழங்குவார்கள் என்றார். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நடைமுறை சாத்தியமான வாக்கு உறுதிகளை அறிவித்துள்ளோம். படித்த கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம்,

தமிழக அரசின் 6லட்சம் கோடி கடனை அடைப்போம், திருவண்ணாமலையில் மூடப்பட்ட டான்காப் ஆலையை மீண்டும் திறப்போம், காந்தி நகர் பகுதியில் காய்கறி மார்ட் அமைத்து தருவோம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார். இதை தொடர்ந்து நாயுடுமங்கலம், கலசப்பாக்கம், போளூர்,ஆரணி ஆகிய பகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *