April 20, 2021

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில், 2 மதுபான பார்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ப்ரீத்திபார்கவி பூட்டி சீல் வைத்தார்…

1 min read

தமிழகம் முழுவதும்
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள இந்த சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில், இரண்டு மதுபான கடைகளின் பார்கள், அரசு நிர்ணயித்த நேரத்தை விட, விடியற்காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்தன. அதேபோல், அங்கு மதுபானங்களும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டும் வந்தன.

இது கூறித்து, பூந்தமல்லி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ப்ரீத்தி பார்கவிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அவர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த மதுபான பார்களில், மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதும், மேலும், அந்த பார்கள் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது.

உடனே, பூந்தமல்லி தேர்தல் அதிகாரி ப்ரீத்திபார்கவி, நடவடிக்கை எடுக்கும் விதமாக, விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 2 மதுபான கடைகளின் பார்களுக்கும் பூட்டி சீல் வைத்தார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *