சோழவரம் அருகே, ஞாயிறு கிராமத்தில், சவுடு மண் குவாரி நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…
1 min read
சோழவரம் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில்,பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில், ஏற்கனவே பலமுறை குவாரி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே ஞாயிறு கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், கடந்த 2015 ம் ஆண்டு ஞாயிறு ஏரியில், “இனி சவுடு மண் குவாரி நடத்தக்கூடாது.” என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஞாயிறு ஏரியில், சவுடுமண் குவரி நடத்த துவங்கினர். அப்போது ஞாயிறு கிராம மக்கள், “எங்கள் ஏரியில் குவாரி நடத்த கூடாது” என, எதிர்ப்புத் தெரிவித்து பல நிலைகளில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் செய்ததைத் தொடர்ந்து, குவாரி நடத்துவது கைவிடப்பட்டது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு அதே ஞாயிறு ஏரியில் இரண்டு தினங்களாக, சவுடு மண்கள் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறு கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் தலைமையில், திரண்டு ஞாயறில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, சோழவரம் இன்ஸ்பெக்டர் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர், “வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், உங்களுடைய கோரிக்கைகளை என்னிடம் கூறுங்கள். நான், அதிகாரிகளுக்கு தகவல் சொல்கிறேன்.” என்றார்.

அதற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளையன் கூறுகையில், “எங்கள் ஞாயிறு ஏரியில் சவுடு மண் குவாரி நடத்தக் கூடாது என, உயர்நீதிமன்றத்தில் எங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஞாயிறு கிளை செயலாளர் ஜெயக்குமார் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, இந்த ஏரியில் குவரி நடத்த அதிகாரிகள் அனுமதி கொடுத்தது தவறு. இந்த மண் குவாரியை மூட வேண்டும். ” என தனது கோரிக்கையை, இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்தத் தகவலை தெரிவிப்பதாக இன்ஸ்பெக்டர் கூறி சென்றார். ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் தலைமையில் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிழல் . இன் – 8939476777