August 3, 2021

வந்தவாசி தொகுதயில், டிராக்டர் ஒட்டியவாறு, திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வாக்கு சேகரித்தார்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வாக்கு சேகரித்தார். பொன்னூர் கிராமத்தில் டிராக்டர் ஒட்டியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரிடம், 24 மணி நேர மருத்துவ மனை அமைக்க வேண்டும், செய்யாறு கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும், சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கர் நூலகம் அமைத்து தரவேண்டும், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும், தெருக்களில் பக்க கால்வாய் அமைத்து தருதல், பெண்களுக்கு தனி கழிவறை அமைத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வேட்பாளரிடம் பொதுமக்கள் முன்வைத்தனர்.

அதே போல், நூறுநாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை அனைவரையும் ஒரு இடத்தில் சந்தித்து, அவர்களுடன் தரையில் அமர்ந்தவாறு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அவரிடம், பெண்கள் “எங்களுக்கு சரிவர நூறுநாள் வேலைகள் வழங்கப்படுவதில்லை, என்பவன உட்பட பல குறைகளை கூறினர். அதற்கு அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வராக எங்கள் கட்சியின் தலைவர்
மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் பொறுப்பு ஏற்றவுடன், கொரோனா கால இழப்பீடுத் தொகையாக நான்காயிரம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உடனடியாக வழங்கப்படும். மேலும், 100 நாள் வேலையும் அதிக நாள் வேலை வழங்கப்படுவதுடன், கூலியையும் உயர்த்தி வழங்கப்படும் என, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். என்று கூறி பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக மாவட்ட அவைத்தலைவர் சீதாபதி, ஒன்றிய செயலாளர் இளங்கோவன் , ஊராட்சி மன்ற தலைவர் செல்வம்,விசிக மூவேந்தன் , வீரமுத்து , ஒன்றிய செயலாளர் தசரதன் ,விநாயகம் ,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed