November 27, 2021

பொன்னேரி தொகுதியில், உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவும், வளர்ச்சி பணிகள் அதிகம் நிறைவேற்றிடவும், நான், பாடுபடுவேன்; துரைசந்திரசேகர் வாக்குறுதி…

1 min read
Spread the love

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பொன்னேரி தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, துரைசந்திரசேகர் போட்டியிடுகிறார். அவர் கல்லூரி பருவத்தில் இருந்து மக்கள் சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வரக்கூடியவர், கல்லூரி மாணவர் தலைவராகவும், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவராகவும், பொறுப்பு வகித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் இவர், காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து ஈடுபாடுடன் கட்சி பணியாற்றி வருகிறார். தற்போது, பொன்னேரி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். அதற்காக, அவர் மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம், ஆரணி ஆகிய பகுதிகளிலும், அவைகளை சுற்றி உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று கடந்த பல நாட்களாக கொளுத்தும் வெயிலிலும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவருடன், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜே.எஸ் கோவிந்தராஜன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், கோளூர் கதிரவன், டாக்டர் பரிமளம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், செல்வசேகரன், நகர செயலாளர்கள் மோகன்ராஜ், டாக்டர் விஸ்வநாதன், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட கூட்டணி கட்சியினர் அனைவரும் திரளாக, வேட்பாளர் துரைசந்திரசேகருடன் தினமும் கிராமம், கிராமமாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணி வேட்பாளர் துரைசந்திரசேகர் பொன்னேரி பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது, “நான் பொன்னேரி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றால், பொன்னேரி தொகுதியில் அனைத்து அடிப்படை பணிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மிகவும் சிறப்பாக செயல்படுத்துவேன். எனவும், அரசினுடைய உதவிகள், வளர்ச்சி பணிகள், திட்டங்கள், அனைத்தும் உடனடியாக பொன்னேரி தொகுதிக்கு கிடைத்திட உழைத்திடுவேன்” எனவும், மிக முக்கிய வாக்குறுதிகளாக வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக, பொன்னேரி தொகுதியில் அடங்கிய அனைத்து தொழிற்சாலையிலும் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டி பாடுபடுவேன்.” எனவும் வாக்குறுதி கொடுத்தார், மேலும் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் அதானி துறைமுகத்தின் விரிவாக்க பணிகளை தொடரவிடாமல் தடுத்திட போராடுவேன்.” எனவும் உறுதியளித்திருக்கிறார்.

மேலும், பொன்னேரி பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டித்தை, பொன்னேரி உட்பட்ட பகுதியிலேயே, புதிதாக கட்டி அங்கு புதிய தாலுகா அலுவலகம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்வேன்.” அதேபோல் பொன்னேரியில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஒன்றாக இணைத்து “ஒருங்கிணைந்த நீதிமன்றம்” அமைக்க 2010 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் உத்தரவின் பேரில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு கிடைக்கின்றன.
நான், உடனடியாக, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, பொன்னேரி பகுதிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிதாக கட்டி, அங்கு அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைத்துவிடுவேன் எனவும், உறுதியளித்தார்.

மேலும், “கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது, பொன்னேரி பகுதியில் மிக உயரிய தொழில்நுட்பத்துடன் நூலகம் அமைத்து அதை, சென்னையில் கலைஞர் கட்டிய, அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படும் வகையில், 2010 ம் ஆண்டு ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து, புதிய நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு பொன்னேரி எல்.என்.ஜி காலேஜ் எதிரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பணி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் பொன்னேரியில் உயரிய தரத்துடன் நூலகக் கட்டிடம் கட்டி திறக்க முயற்சிகளை மேற்கொள்வேன். அதை, அண்ணா நூலகத்துடன் இணைந்து மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், குழந்தைகள் என அனைத்து பிரிவினரும் பயனடையும் வகையில் அந்த கலைஞரின் கனவு திட்டமான புதிய நூலக கட்டிடத்தை கட்டி முடிப்பேன்.” என்றார்.

மேலும், பொன்னேரி பேரூராட்சியில் திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், பொன்னேரி பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளிலும் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமாக உள்ளன. அதில், மழைகாலத்தில் மக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலைமை நிலவுகிறது. நான், அந்த பாதாள சாக்கடை திட்டத்தை மிகவும் சிறப்பாகவும், துரிதமாகவும், பணிகளை நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். எனவும், சாலைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல, 18 வார்டுகளிலும் உள்ள அனைத்து சாலைகளும், தார் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும், விரைவில் அமைக்கப்படும் எனவும், உறுதி அளிக்கிறேன் என்றார்.

“பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை அளிக்கக்கூடிய, அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை மீனவ கிராம மக்கள் மற்றும் பொன்னேரி பகுதி அனைத்து மக்களுடைய உதவியுடன் போராடி அந்த திட்டத்தை, செயல்படுத்த விடாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார். அதே போல், “பழவேற்காட்டில் கடலும், ஏரியும் சந்திக்கும் இடத்தில் இயற்கையாக அமைந்துள்ள முகத்துவாரத்தில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, ஒவ்வொரு வருடமும் தூர்வார கூடிய நிலை ஏற்படுகிறது. இந் நிலையை போக்க வேண்டி, நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் இணைந்து, பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் பாறைகற்களை அடுக்கி, செயற்கையாக தூண்டில் வளைவு தடுப்பு போன்ற முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார்.

பழவேற்காடு பசியாவரம் பாலம் கட்டும் பணிகள் திமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டு, அது இன்று வரை செய்து முடிக்கபடாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த பாலத்தின் பணிகளை மிக விரைவாக துவங்கி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு மிக விரைவில் அமைத்து கொடுப்பேன்” எனவும் உறுதி அளித்தார். அதேபோல், பழவேற்காடு பகுதியில் படகு போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு, பழவேற்காட்டை சிறப்பான சுற்றுலாத்தளமாக தரம் உயர்த்தி, இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்திட, நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

மேலும், ” இப்பகுதி மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரம் இழக்கக்கூடிய வகையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களில் அப்பகுதி இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் போராடி வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும், மேலும், பல கிராம இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவும் போராடுவேன்” எனவும், உறுதியளித்தார். அதேபோல், “பழவேற்காடு பகுதியில் இருந்து எண்ணூர் வரை உள்ள சாலை விரிவுபடுத்தப்பட்டு, எண்ணூர் வழியாக, சென்னைக்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்க முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார்.

கடந்த திமுக ஆட்சியின் போது, பொன்னேரி தொகுதியில் உள்ள பல குக்கிராமங்களுக்கும் மாநகர பேருந்துகள் இயக்க கலைஞர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல வழித்தடங்களில் திமுக ஆட்சி காலத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது இயக்கப்படுவது இல்லை. அதை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த வரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பல கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாத நிலை நிலவுகிறது. அதனால், கிராம பகுதிகளில் இருந்து, வெளியில் பொன்னேரி வருவதற்கு கூட, மாணவ, மாணவிகளும் வேலைக்கு செல்பவர்களும், மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, கிராமப் பகுதிகளில் இருந்து மருத்துவ வசதிக்கு கூட அவசர காலத்தில் மக்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, அனைத்து கிராம பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் தடையின்றி இயங்க நடவடிக்கை மேற்கொள்வேன், என்றார்.

“திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடக்கூடிய ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு இரண்டும் பொன்னேரி பகுதியில் உள்ள கடைநிலை பகுதிகளான பல கிராமங்களை கடந்து பழவேற்காடு ஏரியில் கலக்கின்றன. ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதிகளான பொன்னேரி துவங்கி பெரும்பேடு, ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி, ஆண்டார்மடம், பிரளையம்பாக்கம், ஆகிய பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்து பாதிப்படைகின்றன. அதேபோல் கடந்த ஆண்டும் ஆண்டிமடம் பகுதியில் ஆற்றின் கரையை உடைத்து ஊரின் உள் வெள்ள நீர் புகுந்தது. அதை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வரும் நேரில் கூட சென்று பார்க்காதது அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்தது. அதேபோல், கொசஸ்தலை ஆற்றின் கடைநிலை பகுதிகளான வள்ளூர், அத்திப்பட்டு புதுநகர், கொண்டகரை, நாப்பாளையம், போன்ற பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ள காலங்களில் பெரிய அளவில் பாதிப்படைகின்றன. அப்படிப்பட்ட பேரிடர் காலங்களில் குறிப்பிட்ட அந்த கிராமங்கள் அனைத்தும் பாதுகாக்கும் அளவிற்கு தடுப்பணைகள் கட்டியும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தியும், நீர்நிலைகள் பராமரிக்கப்படும்” என உறுதியளிக்கிறேன் என்றார்.

” ஊரணம்பேடு, திருவெள்ளவாயல், வாயலூர், மெரட்டூர், காணியம்பாக்கம், தேவதானம், அனுப்பம்பட்டு, ஆகிய கிராமங்கள் வரை பூமிக்கு அடியில் கடல் நீர் உள் புகுந்து நிலத்தடி நீரின் தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையை போக்கி, அப்பகுதிகளில் மீண்டும் நிலத்தடி நீர் பயன்படுத்தும் வகையில் நன்நீராக மாற்றக்கூடிய வகையில், அந்த கிராமங்களின் வழியாகச் செல்லும் ஓடை தூர்வாரப்பட்டு, தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் சேமிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் அப்பகுதிகளில் விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்யும் அளவிற்கு நல்ல நீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொள்வேன்” என்றார்.

“பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய பேரூராட்சிகளில் நவீன மின் மயான எரிமேடை அமைத்து தரப்படும்”

பொன்னேரி மற்றும் மீஞ்சூர், பழவேற்காடு பகுதி அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு அவசர சிகிச்சைகள் உட்பட பல உயரிய மருத்துவ வசதிகளுடன், உள்ளிருப்பு நோயாளிகளுக்கு அதிக படுக்கை வசதிகள் செய்து தரப்படும். கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதிகள் தடையின்றி கிடைக்கும் வகையில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு ஆகிய அரசு மருத்துவமனைகளை மிகவும் தரமான மருத்துவமனைகளாக அமைத்து தருவேன்.

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கரிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் மீஞ்சூர், ஜோதிநகர், பொன்னேரி போன்ற நகரங்களின் வழியாக செல்வதால், அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த விபத்துகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

“அத்திப்பட்டு பகுதியில் உள்ள அதிகப்படியான தொழிற்சாலைகளில் வெளி மாவட்ட ஆட்களும், வெளி மாநில ஆட்களும் அதிக அளவில் தங்கி வேலை செய்வதினால், அத்திப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி பலவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவைகளை குறைக்கும் விதமாகவும், வேகமாக வளர்ந்து வரக்கூடிய அப்பகுதி மக்களுடைய பாதுகாப்பு கருதியும், அத்திப்பட்டு பகுதியில் ஒரு காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார்.

மேலும், “மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பால பணிகள் வெகுநாட்களாக, பணிகள் நடைபெறாமல் பாதியிலேயே நிற்கின்றன. அதனால் அந்த ரயில் பாதையை கடந்து செல்லவேண்டிய அரியன்வாயல் பகுதியில் துவங்கி காட்டூர் வரை உள்ள அனைத்து கிராம மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களுடைய வெகுநாள் பிரச்சனையாக இருக்கக் கூடிய, இந்தப் பணியை நான் வழக்கறிஞர் என்ற முறையில், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய உதவியுடன் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு, உடனடியாக பாலத்தின் பணியை முடித்து, அந்த ரயில்வே பாதையை கடந்து செல்லக்கூடிய அனைத்து கிராம மக்களும் பயனடைய செய்வேன்” எனவும், உறுதியளித்தார். அதேபோல், “மீஞ்சூர் பேரூராட்சியில் மிக விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி மக்கள் பயன்பெற செய்வேன்” எனவும், கூறினார்.

சோழவரம் பகுதியில், சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல வளர்ச்சிப் பணிகளை செய்து தர வேண்டி சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் திமுக கூட்டணி வேட்பாளர் துரைசந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து அவைகளை, “நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் உடனடியாக செய்து கொடுப்பேன்” என உறுதி அளித்தார். அப்பணிகள் விவரம் வருமாறு;

ஆமூர் ஏரியை பெரிய நீர்த்தேக்கமாக தரம் உயர்த்தி கொடுக்கப்படும் எனவும், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அடங்கிய எம்ஜிஆர் நகர், மல்லையா நகர் போன்ற பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனையும், இலவச பட்டாவும் வழங்கி அப்பகுதியில் “சமத்துவபுரம் அமைத்து தரப்படும்” எனவும், ஆண்டார்குப்பம் ஊராட்சியில் போரக்ஸ் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த ஊராட்சியிலேயே, இட வசதிகள் செய்யப்பட்டு சமத்துவபுரம் அமைத்து தரப்படும்”எனவும்,

பஞ்செட்டியில் மேல்நிலைப்பள்ளி புதிதாக அமைத்து தரப்படும் எனவும், வழதிலிங்ம்பேடு பகுதியில் புதியதாக அரசு மகளிர் கல்லூரி அமைத்து தரப்படும் எனவும், அருமந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் எனவும், விச்சூர் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும் எனவும், வாக்குறுதி அளித்துள்ளார்.

“பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை அளிக்கக்கூடிய, அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை மீனவ கிராம மக்கள் மற்றும் பொன்னேரி பகுதி அனைத்து மக்களுடைய உதவியுடன் போராடி அந்த திட்டத்தை, செயல்படுத்த விடாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார். அதே போல், “பழவேற்காட்டில் கடலும், ஏரியும் சந்திக்கும் இடத்தில் இயற்கையாக அமைந்துள்ள முகத்துவாரத்தில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, ஒவ்வொரு வருடமும் தூர்வார கூடிய நிலை ஏற்படுகிறது. இந் நிலையை போக்க வேண்டி, நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் இணைந்து, பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் பாறைகற்களை அடுக்கி, செயற்கையாக தூண்டில் வளைவு தடுப்பு போன்ற முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார். மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்தி வைப்பதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும், உறுதியளித்து இருக்கிறார்.

பழவேற்காடு பசியாவரம் பாலம் கட்டும் பணிகள் திமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டு, அது இன்று வரை செய்து முடிக்கபடாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த பாலத்தின் பணிகளை மிக விரைவாக துவங்கி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு மிக விரைவில் அமைத்து கொடுப்பேன்” எனவும் உறுதி அளித்தார். அதேபோல், பழவேற்காடு பகுதியில் படகு போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு, பழவேற்காட்டை சிறப்பான சுற்றுலாத்தளமாக தரம் உயர்த்தி, இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்திட, நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

மேலும், ” இப்பகுதி மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரம் இழக்கக்கூடிய வகையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களில் அப்பகுதி இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் பணி நிரந்தரம் கிடைக்காமல் போராடி வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும், மேலும், பல கிராம இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவும் போராடுவேன்” எனவும், உறுதியளித்தார். அதேபோல், “பழவேற்காடு பகுதியில் இருந்து எண்ணூர் வரை உள்ள சாலை விரிவுபடுத்தப்பட்டு, எண்ணூர் வழியாக, சென்னைக்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்க முயற்சிகள் மேற்கொள்வேன்” எனவும், தொகுதி முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து, வாக்குறுதிகள் அளித்து வாக்குகள் சேகரித்தார்.

G.பாலகிருஷ்ணன்

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed