April 20, 2021

கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதை எதிர்த்து, வியாபாரிகள் போராட்டம்…

1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதுபான கடைகளுக்கு எந்த கட்டுபாடும் விதிக்காத நிலையில், கோயம்பேட்டில் கட்டுப்பாடு விதிப்பு சில்லரை வணிக தடைக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பெருந்தொற்றுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வணிகமே சீரழிந்த நிலையில், வணிகம் செய்து வரும் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், சில்லரை வணிகர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி இருந்தது. ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின்னர்தான் படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு, தற்போதுதான் அரை வயிற்று கஞ்சியாவது சில்லரை வணிகர்களுக்கு கிடைக்கும் நிலை எட்டப்பட்டிருக்கிறது.  சில்லரை வணிகத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுழற்சி முறையில் வணிகம் நடைபெற்று, வணிகர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். என கூறி வியாபாரிகள் கோயம்பேடு நிர்வாக அலுவலகத்துக்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *