April 20, 2021

பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தின் 506 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது…

1 min read

திருத்தல வரலாற்றில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைப்பெறவில்லை‌. இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை உலகை உலுக்கி வரும் சூழலில் தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், பெரிதும் மக்களால் எதிர்நோக்கப்படும் இத் திருவிழாவின் கொடியேற்றம் பெரும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட கொடியானது முக்கிய வீதிகளில் வலம் வந்து பின் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டது. பின் இத் திருத்தலத்தின் அதிபர் காபிரியேல் தலைமையில் மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு பக்திபரவசத்துடன் அன்னையின் கொடியேற்றம் நடைபெற்றது.

உள்ளூர் மக்கள் ஏராளமானோர் குடும்பத்தாருடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். வருகின்ற ஏப்ரல் 17 சனிக் கிழமை மற்றும் 18 ஞாயிற்று கிழமைகளில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடைபெற உள்ளதாக திருத்தல நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *