May 14, 2021

திருவண்ணாமலையில் மனநலம் பதிக்கபட்டவர் கிணற்றில் குதித்ததால், சாவு…

1 min read

திருவண்ணாமலை கோபால் தெருவில் நேற்று மாலை 5 மணி அளவில் மக்கள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர், அங்கு இருந்த பொது கிணற்றில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கிணற்றில் குதித்து விட்டார்.

அதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு தடுக்க முயன்றும், அவர் கிணற்றில் குதித்து விட்டதால், அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விழுந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர்.

பின்னர் அவரை, மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. போலிசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர் .

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *