May 12, 2021

குரும்பூர், புனித லூசியா உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

1 min read

குரும்பூர் புனித லூசியா உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1989ம் ஆண்டு முதல் 1999 வரை படித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. சுமார் 22 வருடங்களுக்கு பின் முன்னாள் மாணவ, மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் இப்படி பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த முன்னாள் மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

முன்னதாக, குரும்பூர் பஜாரிலிருந்து பள்ளிக்கு ஊர்வலமாக வந்த முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் மலர் தூவி வரவேற்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவித்தனர். அதை தொடர்ந்து, சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளிக்கு நினைவு பரிசாக பெரிய சுவர் கடிகாரத்தை பரிசாக வழங்கிய முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவர்களுக்காக ஸ்மார்ட் கிளாசுக்கு எல்.இ.டி. டிவியும், பிரிண்டரும் நினைவு பரிசாக வழங்கினர்.

இதில், பள்ளி தாளாளர் பெடிஸ்டன், லூசியா உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வண்டார் குழலி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜெபபாண்டியன், முன்னாள் மாணவர்கள் பாக்கியராஜ், ரமேஷ், கண்ணன், மாரிமுத்து, திருமலைக்குமார், மாணிக்கவாசகம், சசிக்குமார், செல்வின், மெட்ரின், சிவபாலன், மணிகண்டன், ஜெனிபர், சரவணபெருமாள், ராம்குமார், முத்துக்குமார், நான்சி, வள்ளி, ஜெயா, சுதா, ரூபா, பிரேமா, லெட்சுமி, பிரம்மசக்தி, சசிகலா, கல்யாணி, ஜெல்சியா, கில்டா, எஸ்தர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் – தூத்துகுடி, நிக்சன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *