September 23, 2021

திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம், தூய்மை காவலர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க, பொதுமக்கள் கோரிக்கை…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரவுண்டானா அருகே நகர போக்குவரத்து போலீசார் முககவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

இந்தக் காட்சி தமிழகம் முழுவதும் அரங்கேற்றி வரும் இந்நிலையில், சாலையில் நடமாடும் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, அரசும், போலீசாரும் அறிவித்து விழிப்புணர்வு கொடுத்து, முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறிவரும் இந்த காலகட்டத்திலும்,

திருவண்ணாமலையில் பெரும் தோற்று அதிகரித்து வரும் இந்த நிலையிலும், திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல் பணி செய்யவிடுவதால், அந்த தூய்மை காவலர்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, அவர்களின் குடும்பத்தாருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். ஆகவே உடனடியாக, நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தங்களுடைய எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed