May 13, 2021

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு, இரண்டு குழந்தைகளுடன், தீக்குளிக்க முயன்ற பெண்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினராலும் சித்திரவதை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண் பிழைப்புக்காக, சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது உடன் வேலை செய்துவந்த சேத்துப்பட்டு லூர்து நகர் பகுதியைச் சேர்ந்த செய்சன் மற்றும் அவரின் சித்தப்பா ஆபேல் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்து, கொலை செய்ய முயன்றதினால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண், தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *